சபரிமலையில் ‘அரவணை’ பிரசாதம் பெற 2 மணி நேரம் பக்தர்கள் தவிப்பு



பகிர்க copied

பத்தனம்திட்டா: சபரிமலையில், போதுமான அளவு ‘அரவணை’ பிரசாதம் கையிருப்பில் இருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்த நிலையில், அக்கோவிலில் நேற்று வழிபட சென்ற பக்தர்கள் பிரசாதத்தை பெற இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.


சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல பூஜை காலம், நவ., 17ல் தொடங்குகிறது. மாத பூஜைக்காக கடந்த 18ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி, காங்.,கைச் சேர்ந்த தேவஸ்வம் போர்டு அமைச்சர் முரளிதரன், “அரவணை பிரசாத தயாரிப்புக்கான அரிசி கொள்முதல் ஒப்பந்தத்தை தேவஸ்வம் போர்டு இதுவரை இறுதி செய்யவில்லை” என, குற்றஞ்சாட்டினார்.


இதற்கு பதிலடியாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ஜெயக்குமார், “சபரிமலையில் போதுமான அளவு அரவணை கையிருப்பில் உள்ளது. நாளொன்றுக்கு 1.5 லட்சம் டின் அரவணை தயாரிக்கப்படுகிறது” என, குறிப்பிட்டார்.


இந்நிலையில், அய்யப்பன் கோவிலுக்கு நேற்று வழிபட வந்த பக்தர்கள், அரவணை பிரசாதம் பெற குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் வரை நீண்டவரிசையில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதாக பக்தர்கள் வேதனையுடன் குறிப்பிட்டனர். இந்தப் பிரசாதம் வழங்கப்படும் கவுன்ட்டர்களில், மூன்றில் ஒரு பங்கு மூடப்பட்டிருந்ததால், இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சபரிமலையில் அய்யப்ப சுவாமியை தரிசனம் செய்ய காத்திருக்கும் நேரத்தைவிட, அரவணை பிரசாதம் பெறவே அதிக நேரம் ஆவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்