ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கத்தில் ரிக் வேத உபா கர்மா



பகிர்க copied

கோவை: ராம்நகர் சத்தியமூர்த்தி சாலையிலுள்ள ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கத்தில் ரிக் வேத உபாகர்மா நேற்று நடந்தது.

ரிக்வேதத்தை பின்பற்றும் பிராமணர்கள், காலை புனித நீராடி, தங்களது வேத அத்தியாயங்களை மீண்டும் துவங்குவதற்காக சங்கல்பம் செய்து கொண்டனர்.

யக்ஞ்யோபவீத தாரணம் என்றழைக்கும் ; பழைய பூணுலை மாற்றிவிட்டு, புனிதமான புதிய பூணுலை அணிந்து கொண்டனர்.

ரிஷிகளுக்கும் முன்னோர்களுக்கும் தர்ப்பணம் அளித்து பிரம்ம யக்ஞம் மற்றும் தர்பணம் செய்து வழிபாடு செய்தனர்.

ரிக் வேத மந்திரங்களை உச்சரித்து வேத பாராயணம் செய்தனர். உறவினர்களும் பெற்றோர்களும் மங்கள பொருட்களை கொடுத்து ஆசிர்வதித்தனர்.

பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்