கூடலூர்: கூடலூரில், கோவில்களில் விஜயதசமியை முன்னிட்டு, நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், குழந்தைகள் அனா... ஆவன்னா... எழுதி கல்வியை துவங்கினர்.
கூடலூர் விநாயகர் கோவிலில், கோவில் குருக்கள் கார்த்திகேயன், குழந்தைகளுக்கு, பச்சை அரிசியில் அனா... ஆவன்னா எழுதி, வேல்முனையில் தேன் தடவி குழந்தைகளின் நாவில் ஓம் எழுதி கற்றலை துவக்கி வைத்தர்ர். ஏராளமான குழந்தைகள் பங்கேற்று அரிச்சுவடியை துவங்கினர். மேல் கூடலூர் சந்தக் கடை மாரியம்மன் கோவில் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களிலும், குழந்தைகளுக்கு கல்வி துவங்கும் அரிச்சுவடி நிகழ்ச்சி நடந்தது. இதில், பெற்றோர் பங்கேற்று தங்கள் குழந்தைகளுக்கு கல்வியின் முதல் படியான அரிச்சுவடியை துவக்கி வைத்தனர்.