மசினி அம்மன் கோவில் தசரா தேர் திருவிழா கோலாகலம்



பகிர்க copied

கூடலூர்: மசினகுடி, மசினி அம்மன் கோவிலில் தசரா தேர் திருவிழா சிறப்பாக நடந்தது.

முதுமலை, மசினகுடியில், அமைந்துள்ள பழமையான மசினியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் தசரா பண்டிகை பாரம்பரிய முறையில் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த வாரம் துவங்கியது.

மசினி அம்மனின் சகோதரியான சிக்கம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மசினியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி மாலை 4:00 மணிக்கு துவங்கியது. இருளர் பழங்குடியினர் மற்றும் மசினகுடி மக்கள் பாரம்பரிய இசையுடன், பக்தி பாடல்கள் பாடி ஊர்வலமாக மசினகுடி அழைத்து வந்தனர். மசினகுடியில் பக்தர்களின் பூஜைகளை பெற்று, இரவு 9:00 மணிக்கு மசினி அம்மன் கோவிலை வந்தடைந்தது.

நேற்று முன்தினம், காலை 8:30 மணிக்கு சொக்கநள்ளி மாதேஸ்வரன் கோவிலில் இருந்து கத்தி எடுத்தல் வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:30 மணிக்கு தசரா தேர் திருவிழா ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை கூடலூர் டி.எஸ்.பி., கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தேர், மசினகுடியின் முக்கிய சாலைகள் வழியாக சென்று, நேற்று, காலை 6:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், மாலை முளைப்பாரி எடுத்து வருதல் மற்றும் மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றது. இன்று, ஸ்ரீ சிக்கம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீமசினி அம்மன் கோவில் பக்தர்கள் நலச்சங்கம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்