வாழ்வியலோடு இணைந்த திருவிழாக்கள்: ஆன்மிக பேச்சாளர் பேச்சு



பகிர்க copied

உடுமலை: ‘‘வாழ்வியலும் நம் திருவிழாக்களும் நம்மோடு இணைந்தவையாக அமைந்துள்ளது; இதை இளைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்தி, அவர்களை நல்வழியில் அழைத்து செல்வோம்’’, என ஆன்மிக பேச்சாளர் குருசுபாஷ்சந்திரபோஸ் பேசினார்.

உடுமலை நேருவீதி காமாட்சி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, நாள்தோறும் ஆன்மிக பேருரை நிகழ்ச்சி நடக்கிறது.

‘கலி தீர்க்கும் கந்த புராணம்,’ என்ற தலைப்பில், ஆன்மிக பேச்சாளர் குரு சுபாஷ்சந்திரபோஸ் பேசியதாவது: நவராத்திரி முப்பெரும் தேவியருக்கு நன்றி செலுத்தும் விழாவாகும். மனித வாழ்வின் பிரதிபலிப்பாகவே நம்முடைய பண்டிகைகள் அமைந்துள்ளன.

ஒரு மனிதன் ஆயிரம் இருந்தாலும், மனம் அமைதியற்றவனாக இருந்தால், அவன் இருந்தும் இல்லாதவனாகிறான்.

மனம் என்பது ஓயாமல் அலையக்கூடியது. மனம் என்பது துன்பத்தைப் பற்றியே எண்ணி கவலைப்படுவதாகவே அமைந்துள்ளது . இத்தகைய கவலைகளுக்கு அருமருந்தாக பண்டிகைகள் அமைகிறது.

வாழ்வில் பின்பற்ற வேண்டிய நல்ல நடைமுறைகள் குறித்து, பண்டிகைகள் வாயிலாக விழிப்புணர்வு கிடைக்கிறது. அவ்வகையில், துர்க்கை வழிபாடு நமக்கு சகலசெல்வங்களையும் தரக்கூடியது.

அதனால்தான் அபிராமி பட்டர், ‘தனம் தரும், கல்வி தரும் தளர்விலா மனம் தரும் அபிராமி நல்லணவெல்லாம் தருவாள்,’ என்று போற்றுகின்றார் .

பண்டிகைகளில் சிறப்பானது, அவை நம் வாழ்வியலோடு இணைந்து, நமக்கு வழிகாட்டுவதாகும். இது குறித்து நமது இளைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்தி, அவர்களை நல்வழியில் அழைத்து செல்வோம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்