தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர்; அம்பு எய்தல் நிகழ்ச்சியில் பரவசம்



பகிர்க copied

மதுரை:  விஜயதசமியையொட்டி அழகர்கோவில் கள்ளழகர் கோயில் கோட்டைவாசல் முன்பு அம்புவிடும் மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நவராத்திரி விழா அக். 11 முதல் 20 வரை, விஜயதசமி உற்ஸவம் நேற்று அக். 21ல் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் மாலை 5:10 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு கோயில் உட்பிரகாரத்தில் நடைபெற்றது. நேற்று சுந்தரராஜ பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி கோட்டைவாசல் முன்புள்ள அம்பு போடும் மண்டபத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாள் அம்பு போடும் உற்ஸவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்