மாமன்னன் ராஜராஜ சோழன் 1041வது சதய விழா : பெருவுடையாருக்கு பேரபிஷேகம்



பகிர்க copied

தஞ்சாவூர், - உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழாவை முன்னிட்டு பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான மங்களப் பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது.


தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041 வது  சதய விழா நேற்று காலை துவங்கியது. தொடர்ந்து சதய விழாவின்,முக்கிய நிகழ்வாக இன்று காலை கோவிலில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது. பிறகு, திருமுறை நூலை யானை மீது வைத்து 100க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் ராஜ வீதிகளில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில்,ராஜராஜ சோழன் சிலைக்கு தஞ்சாவூர் எம் எல் ஏ சரவணன், கலெக்டர் ரேவதி, அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழு தலைவர் சரவணன், தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகளின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு 48 வகையான மங்களப் பொருட்களால் பேரபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்