திருவண்ணாமலை மகா தீப கொப்பரை வைக்கும் இடத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு வழிபாடு



பகிர்க copied

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கார்த்திகை தீப திருவிழாவில் மகா தீபக் கொப்பரை வைக்கப்படும் இடத்தில் காவல்துறையினர் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன. கார்த்திகை தீபத் திருவிழா நெருங்குவதை முன்னிட்டு, 2,668 அடி உயரமுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீபமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்த நிகழ்வு நடைபெற்றது. கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்கப் பணிகள் தற்போது முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்