உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் வராகி அம்மனுக்கு 11 வகையான அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடந்தது. பழங்கள், கிழங்குகள், வஸ்திரங்கள் வைக்கப்பட்டது. பெண்கள் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டை பிடித்து வைத்தனர். எலுமிச்சம்பழம், தேங்காய் ஆகியவற்றில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.