உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நுழைவு வாயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
உளுந்தூர்பேட்டை நகராட்சி புதுதெரு. கணேசனார் தெருவில் உள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நுழைவு வாயில் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம். தீபாராதனை வழிபாடு நடந்தது. மாலை 5 மணி அளவில் முதற்கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7 மணியளவில் இரண்டாம் கால பூஜை, நாடி சந்தானமும், பூர்ணாஹதியும், தீபாரதனை வழிபாடும் நடந்தது. அதனைத் தொடர்ந்து கலசம் புறப்பாடு நடந்தது. காலை 9. 45 மணியளவில் ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நுழைவாயில் பகுதியில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஸ்ரீ சாரதா ஆசிரம நிர்வாகி யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா, முன்னாள் கவுன்சிலர் வெற்றிவேல், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், அ.தி.மு.க., நிர்வாகிகள் வெங்கடேசன், திலீப் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவிமியை வழிபட்டனர்.