கீழக்கரை பத்திரகாளியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா



பகிர்க copied

கீழக்கரை: கீழக்கரை நாடார் கடைத்தெருவில் உள்ள பத்திரகாளி அம்மன் கோயிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. யாக வேள்வி வளர்க்கப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பொங்கலிட்டனர். ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி அமிர்தராஜ், மலர்கொடி ஆகியோர் செய்திருந்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்