நாசிக் சிம்மஸ்த கும்பமேளா கோலாகல துவக்கம்; கொடியேற்றி துவக்கி வைத்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு



பகிர்க copied

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் கொடியேற்ற விழாவுடன் இன்று (அக். 31) கொடியேற்றத்துடன் துவங்கியது. நண்பகல் 12.02 மணிக்கு துவங்கிய விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று கொடியேற்றினார்.


ராம்தீர்த்தத்தில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்றார். அதே நேரத்தில், குஷாவர்த்த தீர்த்தத்தில் நடைபெறும் விழாவில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சந்நிதானம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர். இரு இடங்களிலும் கொடியேற்ற விழா நிறைவடைந்த பின்னர், குடியரசுத் தலைவர் திரிம்பகேஷ்வர் ஜோதிர்லிங்கக் கோவிலுக்கும், குஷாவர்த்த தீர்த்தத்துக்கும் சென்று ஸ்தம்ப பூஜையில் பங்கேற்கிறார்.


கோதாவரி கரையில் சிறப்பு நிகழ்ச்சி: மாலையில் புனித கோதாவரி நதிக்கரையில் அரசு சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது சிம்மஸ்த கும்பமேளாவுக்கான அதிகாரப்பூர்வ இணையதளம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மேலும், அஞ்சல் துறையுடன் இணைந்து குஷாவர்த்த தீர்த்தம் மற்றும் ராம்குண்ட் ஆகிய புனிதத் தலங்களைப் போற்றும் சிறப்பு அஞ்சல் தலைகளும் வெளியிடப்பட உள்ளன. பாரம்பரியக் கொடியேற்றத்துடன் தொடங்கும் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளாவை முன்னிட்டு, விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்