திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழா



பகிர்க copied

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு உற்ஸவர் சன்னதியில் தெய்வானை மட்டும் எழுந்தருளினார்.


அம்பாள் முன்பு வெள்ளி குடத்தில் புனித நீர் நிரப்பி வைத்து பூஜை நடந்தது. அரிசி, வெல்லம், நெல், வெற்றிலை, பாக்கு, காதோலை கருகமணி, வேப்பிலை, மஞ்சள் கிழங்கு, வளையல்கள், வாழைப்பழம் வைத்து யாகம் வளர்க்கப்பட்டு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. படிகளில் வைக்கப்பட்டிருந்த நெல், அரிசி ஆகியவற்றால் அம்பாள் முன்பு மூன்று முறை ஏற்றி இறக்கும் நிகழ்ச்சி முடிந்து புனித நீர் அபிஷேகம் நடந்தது. தீபாராதனைக்கு பின்பு பக்தர்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டது. பின்பு ரத வீதிகளில் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.


* கிரிவலப் பாதையிலுள்ள தியான மையத்தில் அதிசய காமாட்சி பஞ்சமுக வராஹி அம்பாளுக்கு அபிஷேகங்கள், அலங்காரம், பூஜை, தீபாராதனை முடிந்து புஷ்ப அர்ச்னை நடந்தது.


* எஸ்.ஆர்.வி. நகர் லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வராஹி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். லலிதா பரமேஸ்வரி, பால திரிபுர சுந்தரி அம்மனுக்கு பாலாபிஷேகம் உள்பட திரவிய அபிஷேகங்கள் முடிந்து அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்