சபரிமலையில் 25 பசு, கன்றுகளுடன் கோசாலை விரிவாக்கம்

டிசம்பர் 12,2018



சபரிமலை: சபரிமலையில் ஐயப்பன் அபிஷேகத்திற்காக ஒரு பசுவுடன் துவங்கிய கோசாலை இன்று 25 பசு, கன்றுகளுடன் விரிவாக்கம் அடைந்துள்ளது.சபரிமலை ஐயப்பனுக்கு அதிகாலை நடைபெறும் அபிஷேகத்துக்கு பால் கிடைக்க சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கொல்லத்தை சேர்ந்த சுனில் சாமி என்ற பக்தர் ஒரு பசுவை சபரிமலைக்கு தானமாக வழங்கி பராமரிப்பு செலவுகளையும் ஏற்றார்.அந்த ஒரு மாட்டின் கன்றுகள் மூலம் பெருகி தற்போது இந்த கோசாலையில் 25 பசுக்கள் உள்ளன.மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஆனந்த சாமந்தா பராமரிக்கிறார். கோசாலையில் பசுக்களுக்கு பேன், விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலை இரண்டு மணிக்கு பால் கறந்து அபிஷேகத்துக்கு பால் கொண்டு சேர்ப்பது இவரது முக்கிய வேலையாகும். பசுக்கள் அதிகம் உள்ளதால் ஐயப்பன் அபிஷேகத்திற்கு தடையின்றி பால் கிடைக்கிறது.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்