தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு



தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இவ்விழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் நான்கு ராஜவீதிகளில் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நாளான ஏப்.20-ம் தேதி சித்திரை தேரோட்டம் நான்கு ராஜவீதிகளில் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதைத் தொடர்ந்து இன்று சந்திரசேகரசுவாமி அம்பாளுடன் புறப்பட்டு சிவகங்கை பூங்காவில் உள்ள குளத்துக்கு சென்றனர். குளக்கரையில் சுவாமி- அம்பாள் எழுந்தருள, அஸ்திரதேவருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பிறகு குளத்தில் தண்ணீர் இல்லாததால், பெரிய குவளையில் நீர் நிரப்பப்பட்டது. அதில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் கோவிலுக்கு சுவாமி - அம்பாள் வந்ததும், கொடியிறக்கம் செய்யப்பட்டு, சித்திரை விழா நிறைவு பெற்றது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்