பண்ருட்டி பெருமாள் கோவில் தேரோட்டம் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பு



பண்ருட்டி : பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வடம் பிடித்தனர்.

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை முதல் தினமும் உற்சவர் பெருமாள் மாட வீதியில் வீதியுலா நடந்து வந்தது. 9ம் நாள் உற்சவமான நேற்று தேரோட்டம் நடந்தது. அதையொட்டி, காலை 6:30 மணிக்கு, ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக சிறப்பு அலங்காரத்தில் தேரில் பெருமாள் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். பண்ருட்டி காந்தி சாலை வழியாக வந்து, 9:00 மணிக்கு ராஜாஜி சாலையில் தேர் நிலையை அடைந்தது. நிகழ்ச்சியில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன், செயலாளர் ராஜேந்திரன், எஸ்.வி.ஜீவல்லர்ஸ் வைரக்கண்ணு, அருள், வள்ளிவிலாஸ் சரவணன், கவுன்சிலர்கள் ஆனந்தி சரவணன், சீனுவாசன், கவுரிஅன்பழகன், சண்முகவள்ளிபழனி, தொழிலதிபர்கள் ஐஸ்வர்யா ேஹாம் நீட்ஸ் ராஜ்மோகன், வசந்தபவன் ஸ்வீட்ஸ் ஆறுமுகம், முன்னாள் துணை சேர்மன் விஜயரங்கன், ஆஞ்சநேயா ஸ்டோர்ஸ் சந்தோஷ்குமார், பழமலை செட்டியார் மளிகை வீரப்பன், கேபிள் டி.வி.சங்க மாநில செயலாளர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்