22 அடி உயர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா



கள்ளக்குறிச்சி : அகரகோட்டாலத்தில் புதிதாக கட்டப்பட்ட 22 அடி உயர மகாவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமிக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி அடுத்த அகரக்கோட்டாலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள், 22, அடி உயரம் கொண்ட மகாவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி விஷ்வக் ஆராதனம், யஜமான சங்கல்பம், ஆச்சார் பவர்ணம், மிருத் சங்கிரஹனம், அங்குரார்ப்பணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை 6:30 மணியளவில் யாகசாலை புண்யாஹவசம், கோபூஜை, அக்னி பூஜை, கும்ப பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 9:30 மணியளவில் கோவில் கலசம் மற்றும் மகாவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமிக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், முன்னாள் சேர்மன் ராஜசேகர் உட்பட பலர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்