கலியுகத்திற்கு முந்திய கிருத, திரேதா யுகங்களில் முன்னோர்கள் நேரில் காட்சியளித்து திதி, தர்ப்பணங்களை ஏற்றனர். அப்போது பூமியில் தர்மம் தழைத்து இருந்ததால் இந்நிலை இருந்தது. ராமன் வனவாசம் முடித்து அயோத்தி திரும்பியதும் தசரதர் நேரில் தோன்றி ஆசியளித்தார். துவாபர யுகம், கலியுகத்தில் கண்ணுக்கு தெரியாமல் ஆசியளிக்கின்றனர். வயிற்றில் பிறந்தால் மட்டும் ஒருவன் மகனாகி விட முடியாது. அதற்கான தகுதி வேண்டுமானால் வாழும் போது பெற்றோரை ஆதரிக்கவும், இறப்புக்கு பின் பிதுர்கடன் செய்யவும் வேண்டும். முன்னோருக்கும், தனக்கும் தொடர்பே இல்லை என கருதுபவர்களை ‘மூடர்கள்’ என எமதர்மன் பழிக்கிறார்.