கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சகலகலாவல்லி மாலையை படித்தால் கல்வி வளம் பெருகும். வெண்டாமரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்தண்டா மரைக்குந் தகாது கொலோ சகமேழும் அளித்துஉண்டா னுறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்பாடும் பணியிற் பணித்தருள்வாய் பங்கயா சனத்திற்கூடும் பசும்பொற் கொடியே! கனதனக் குன்று மைம்பாற்காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!அளிக்கும் செந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலில்குளிக்கும் படிக்கென்று கூடுங் கொலோ உளம் கொண்டு தெள்ளித்தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக் கண்டுகளிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே!துாக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்வாக்கும் பெருகப் பணித்தருள்வாய் வடநுாற் கடலும்தேக்கும் செந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந் நாவினின்றுகாக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!பஞ்சப் பிதந்தரு செய்ய பொற்பாத பங்கேருகமென்நெஞ்சத் தடத்தல ராததென்னே நெடுந் தாட்கமலத்தஞ்சத் துவச முயர்த்தோன் செந்நாவு மகமும் வெள்ளைத்தஞ்சத் தவிசொத் திருந்தாய்! சகலகலாவல்லியே!பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும்யான்எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய்; உளம் கொண்டு தொண்டர்தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதந் தெளிக்கும் வண்ணம்காட்டும் வெள்ளோதிமப் பேடே! சகலகலாவல்லியே!சொல்விற் பனமும் அவதான மும்கவி சொல்லவல்லநல்வித்தை யுந்த தடிமை கொள்வாய் நளினாசனஞ்சேர்செல்விக் கரிதென் றொரு காலமும் சிதையாமை நல்கும்கல்விப் பெருஞ் செல்வப் பேறே! சகலகலாவல்லியே!சொற்கும் பொருட்கும் உயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்னநிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கைநற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்ன நாணநடைகற்கும் பதாம் புயத்தாளே! சகலகலாவல்லியே!மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்பண்கண்ட அளவிற் பணியச்செய் வாய்படைப் போன் முதலாம்விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பலுன் போல்கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலாவல்லியே!