அக்னியில் செய்யப்படுவது யாகம். அக்னிம் துாதம் வ்ருணீமஹே என்கிறது வேதம். யாகத்தில் இடும் திரவியங்களை குறிப்பிட்ட தெய்வத்திடம் சேர்க்கும் துாதரான அக்னியுடன் ஸ்வாஹா, ஸ்வதா என்னும் இரு சக்திகள் உள்ளனர். யாகத்தில் இடப்படும் திரவியங்களை ஸ்வாஹா எனும் சக்தி மூலம் தேவர்களுக்கும், ஸ்வதா என்னும் சக்தி மூலம் முன்னோர்களுக்கும் அனுப்புவார்.