வேத விற்பன்னர்கள் மந்திரம் சொல்லி அக்னி குண்டத்தில் இடும் குச்சிகளுக்கு சமித்து என்று பெயர். இதற்கு விசேஷ பலன் உண்டு. அத்தி – மகப்பேறு நாயுருவி – லட்சுமி அருள் எருக்கு– எதிரி பயம் நீ்ங்கும் அரசு – அரசால் நன்மை ஆல் – புகழ் சேரும் வன்னி – கிரக தோஷம் தீரும். வில்வம் – செல்வம் பெருகும் அருகம்புல் – விஷ பயம் போகும் புரசங்குச்சி – கல்வி வளர்ச்சி கருங்காலி – பில்லி, சூன்யம் நீங்கும் நொச்சி – காரியதடை அகலும்.