நம்மைச் சுற்றி எட்டுத்திசைகளிலும் இந்திரன் உள்ளிட்ட எட்டு தேவர்கள் காவல் புரிகின்றனர். இவர்களை அஷ்டதிக்கு பாலர்கள் என்பர். இவர்கள் ‘ததாஸ்து’ என்று அடிக்கடி கூறுவர். ‘அப்படியே ஆகட்டும்’ என்பது இதன் பொருள். கோபத்தில் தீய சொற்களை சொல்லும் போது, அத்துடன் ‘ததாஸ்து’ என்ற சொல்லும் இணைய தீங்கு உண்டாகும். எனவே நல்ல சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும்.