Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கமுதக்குடி அம்மன் கோயில் ... திருப்பரங்குன்றத்தில் மலைமேல் மகாதீபம் ஏற்றம் திருப்பரங்குன்றத்தில் மலைமேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2020
06:11

திருவண்ணாமலை: அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Default Image

Next News

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 20ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கார்த்திகை தீப விழாவின் 10ம் நாளான இன்று (நவ.29) அதிகாலை 03.30 மணி அளவில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில் 5 மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

பின்பு அதிகாலை நான்கு மணிக்கு நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே  அதாவது ஏகன், அனேகன் என்பதை கூறும்  வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் கணேசன் குருக்கள் கையிலேந்தி உள்ள பரணி தீபம்  மடக்கில்  ஜோதி ரூபமாய் இருக்கும் “அண்ணாமலையார்” சன்னதி வெள்ளி கதவு அருகே தீபமாக காட்சியளித்தார். பக்தர்கள்  அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர். இதையடுத்து மாலை பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பின் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்தனர். அப்போது அர்த்தநாரிஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி நடனமாடி காட்சியளித்தார். காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடி மரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர்.


பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு அவைகளை கொண்டு 2ஆயிரத்து 668 அடி மலை உயரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்பட்டது. அப்போது மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர். கொரோனா அச்சம் காரணமாக மகாதீப நிகழ்வின் போது பக்தர்கள் மலையேறவும் கிரிவலம் சுற்றவும் தடை உள்ளது. விழாவில் அரசு உத்தரவுப்படி பொதுமக்கள் அனுமதியில்லை. எனவே கோயில் வலைத்தளம் மற்றும் தினமலர் இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தீப திருவிழா பாதுகாப்பு பணியில், 2,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar