பதிவு செய்த நாள்
27
ஏப்
2024
07:04
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
செஞ்சி அடுத்த பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் சித்திரை மகாபாரத பிரசங்கம், அக்னி வசந்த விழா, திருத்தேர் உற்சவம் நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று (26ம் தேதி) காலை 6 மணிக்கு திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், மகாதீபாரதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். இரவு 7.30 மணிக்கு கொடியேற்றமும், தொடர்ந்து மகா தீபாராதனையும் நடந்தது. இதில் விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் தொடர்ச்சியாக மே மாதம் 6ஆம் தேதி செம்பாத்தம்மன், பச்சையம்மன், முனீஸ்வரன், கெங்கை அம்மனுக்கு காப்பு கட்டுதலும், இரவு சாமி வீதி உலாவும், 8 ஆம் தேதி திரவுபதியம்மன் திருக்கல்யாணமும், 11 ஆம் தேதி தபசு ஏறுதலும், 14 ஆம் திருத்தேர் உற்சவமும், 15 ஆம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.