* சனிக்கிழமையில் விரதமிருந்து சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம், எள்தீபம் ஏற்றுதல் * விஷ்ணு சஹஸ்ரநாமம், அனுமன் சாலீஸா படித்தல் * சனி பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை * வன்னிமரம் அல்லது வன்னிமரத்தடி விநாயகரை சனிக்கிழமையில் சுற்றி வந்து வழிபடுதல் * சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு எட்டு தேங்காய் உடைத்தபின் நெய்தீபம் ஏற்றுதல் * சனியின் பார்வையில் இருந்து தப்பித்தவர்கள் விநாயகர், ஆஞ்சநேயர். இவர்கள் இருவரும் இணைந்த கோலமான ஆத்யந்தபிரபுவை வழிபட்டால் நன்மை உண்டாகும். * நளபுராணம், திருநள்ளாற்று பதிகம் படித்தால் கெடுபலன் குறையும். * சனீஸ்வரருக்கு எள்ளுச்சாதம் நைவேத்தியம் செய்து காகத்திற்கு படைத்தல் * நல்லெண்ணெய், உளுந்து, இரும்புச்சட்டியை ஏழைகளுக்கு தானம் அளித்தல் * பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களில் அன்னதானம் செய்தல் * மாற்றுத் திறனாளிகளுக்கு பொருளுதவி செய்தல்