Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடுத்தால் கிடைக்கும்! வரசித்தி விநாயகனே! வல்வினை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனதை அடக்க வழியிருக்கு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2021
11:02

திருப்பூர் கிருஷ்ணன்


காஞ்சி மடத்தில் மகாபெரியவரின் முன்னிலையில் பக்தர்கள் கூடியிருந்தனர். அதில் ஒருவர், ‘‘சுவாமி! எத்தனையோ முயற்சி செய்து விட்டேன். மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லையே?’’ என்றார்.  
‘‘ இந்த பாரத புண்ணிய பூமியில் ஞானிகள் பலர் வாழ்ந்து காட்டி, தங்களின் அனுபவத்தை நமக்காக சொல்லியிருக்கிறார்கள்.
 ‘இந்திரிய நிக்கிரகம்’ ஒன்றே மனதை அடக்கும் வழி என்பது அவர்களின் முடிவு. ‘ புலன் அடக்கம்’  என்பது இதன் பொருள். ‘‘உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்கோர் வித்து’’  
என திருவள்ளுவரும் புலனடக்கம் பற்றி திருக்குறளில் கூறியுள்ளார். ஐம்புலன்கள் என்னும் யானைகளை, அறிவு என்னும் அங்குசத்தால் மனதை அடக்கியவன் வானுலக வாழ்விற்கு விதை போன்றவன்.
 மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களை வரிசைப்படுத்துவர். இவற்றை அடக்கினால் மனம் அடங்கும். அது சரி... இவற்றில் எதை முதலில் அடக்க வேண்டும் எனக் கேட்டால் வாயைத் தான்!
வாய்க்குத் தான் வேலை அதிகம். கண்ணுக்கும், காதுக்கும் பார்ப்பது, கேட்பது என்று ஒவ்வொரு வேலைதான்! ஆனால் மூக்கிற்கு சுவாசிப்பது, வாசனையை நுகர்வது என இரண்டு வேலைகள். வாய்க்கோ சாப்பிடுவது, பேசுவது என இரண்டு வேலைகள்.  கண், காதுகளை பொறுத்தவரை வலது, இடது என இரண்டு கருவிகள் உள்ளன. மூக்கு, வாய் என்பது ஒன்று மட்டுமே.
வாயை கட்டுப்படுத்துவதற்காக சிலர் மவுன விரதம் மேற்கொள்வர். பேசாமல் இருந்தால் மனம் மெல்ல மெல்ல அடங்கும்.  
சாப்பிடுவது, பேசுவது என இரண்டையும் பாதியாகக் குறைக்கப் பழக வேண்டும். ஆனால் நாம் நேர்மாறாக தேவைக்கு அதிகமாக வாய்க்கு வேலை கொடுக்கிறோம். ஓயாமல் சாப்பாடு, நொறுக்குத் தீனி என்று சுவைத்துக் கொண்டே இருக்கிறோம். எப்போதும் வீணாக பேசிக் கொண்டே இருக்கிறோம்.
மனதைக் கட்டுப்படுத்த விரும்பினால் முதலில் வாயைக் கட்ட வேண்டும். நாளடைவில் தானாக மனம் அடங்கும்’’ என்றார்
 கேட்டவருக்கு மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் மகாபெரியவரின் விளக்கம் கேட்டு பயனடைந்தனர். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar