பதிவு செய்த நாள்
11
டிச
2021
04:12
அன்னூர்: கொரோனா தொற்று காரணமாக, மன்னீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடத்தப்பட மாட்டாது என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில், கொரோனா காரணமாக இந்த ஆண்டு தேரோட்டம் நடத்தப்பட மாட்டாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை : அருள்மிகு மன்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில் பிரசித்தி பெற்ற சிவஸ்தலம் ஆகும். இக்கோவில் தேர்த் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 16ம் தேதி நடைபெற வேண்டிய தேர்த்திருவிழா, தற்போது நிலவி வரும் நோய் தொற்று காரணமாகவும், அரசு வழிகாட்டி நெறிமுறைகள் நடைமுறையில் இருப்பதன் காரணமாகவும், வெளிபுறப்பாடு மற்றும் தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் பொதுமக்கள் நலன் கருதி நடத்தப்பட மாட்டாது. மேலும் சுவாமி புறப்பாடு, வழக்கம்போல் உள் புறப்பாடு மட்டும் நடைபெறும், பூஜை, வழிபாடு, புறப்பாடு ஆகியவற்றில் பொதுமக்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.