திருச்செந்துார் கோவிலை சுற்றி ‘ட்ரோன் கேமரா’ பறக்க தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2026 10:01
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சிலர் அனுமதியின்றி கோவிலின் மேற்பகுதியிலும், கோவில் வளாகத்திலும் ட்ரோன் கேமரா பறக்கவிட்டு வீடியோ எடுப்பது, பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கோவிலை சுற்றி ட்ரோன் கேமரா பறக்க கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், மொபைல் போன் அல்லது வீடியோ கேமரா மூலம் ரீல்ஸ் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி யாராவது செயல்பட்டால், அவர்கள் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவில் நிர்வாகம் அறிவிப்பு பலகை வாயிலாக தெரிவித்துள்ளது.