Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
மகிழ்ச்சியுடன் நோன்பைத் துவங்குவோம்: ரமலான் சிந்தனைகள்-1
ஜூலை 21,2012
அ-
+
Temple images

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ரமலான் மாதத்தை "ஷஹ்ரே அஜீம் என்றும், "ஷஹ்ரே முபாரக்என்றும் குறிப்பிட்டார்கள். அந்த அரிய மாதம் துவங்கி விட்டது. இந்தச் சொற்களுக்கு கண்ணியம் நிறைந்த மாதம், அருள்வளம் நிறைந்த மாதம் என்று பொருள். இந்த மாதத்தின் பெருமையை அளவிட வார்த்தைகள் இல்லை. இறை நம்பிக்கையாளர்களுக்கு இனிய மாதம் இது. இந்தமாதத்தில் நோன்பிருப்பவர்கள் அடையும் பலன் பற்றி அண்ணலார் அவர்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த மாதத்தில் தான் "லைலத்துல் கத்ர்என்னும் மகத்தான இரவும் வருகிறது. "நாம் இதனை, தெளிவான வேதத்தினை,அருள்பாலிக்கப்பட்ட ஓர் இரவில் இறக்கி வைத்தோம் என்று ஏக இறைவனானஅல்லாஹ், புனித வேதமான குர்ஆன் அருளப்பட்ட நாள் குறித்து சொல்கிறான். இந்த மாதத்தின் எல்லா நாட்களுமே புனிதநாட்கள் தான். எல்லா இரவுகளுமே புனிதமான இரவு தான் என்று குறிப்பிடுபவர்களும் உண்டு.
நமது தேவைகளை மறக்க பயிற்சியளிக்கும் மாதம் ரமலான்.

இறைவனின் கட்டளைக்கு கீழ்ப்படியும் உணர்வை அளிப்பது இந்த புனிதமாதம். இறைவனின் அருளைப் பெறவேண்டும் என்பதற்காக பசி தாங்கி இம்மாதத்தில் நோன்பிருக்கிறோம். பசியின் கொடுமையை உணர்ந்தால் தான், பிறர் பசி தீர்க்க முடியும் என்ற எண்ணத்தை அருளும் ஒப்பரிய மாதம் இது. இதனால் ஏழைகளுக்கு அள்ளி வழங்க சந்தர்ப்பத்தை தருகிறது இந்த நல்மாதம்."ரமல் என்றால் "கரித்தல். ஆம்...நம் பாவங்களை நோன்பிருந்து சுட்டுப் பொசுக்கும் நல்வாய்ப்பு மிக்க மாதம் இது. இந்த மாதத்தில் நோன்பிருப்பவரின் முந்தைய பிந்தையபாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.பிறகென்ன! மகிழ்ச்சியுடன் நோன்பைத்துவங்குவோமே!

இன்று நோன்பு திறக்கும் நேரம் : மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம் : காலை 4.25

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.