திருபுவனை: திருபுவனை அடுத்த சன்னியாசிகுப்பத்தில் உள்ள சப்த மாதா கோவிலில், வாராகி அம்மனுக்கு நேற்று தேய்பிறை பஞ்சமி கால சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து வராகி அம்மன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.