Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் இருப்பது ... தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் ஆயில்ய நட்சத்திரம் சிறப்பு வழிபாடு தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் ஆயில்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாப்பூர் பகுதியில் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
மயிலாப்பூர் பகுதியில் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

10 டிச
2025
10:12

சென்னை: மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தர்மராஜா கோவிலில், 500 ஆண்டுகள் பழமையான மூன்று பலகைக்கல் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 


இது குறித்து, அச்சங்கத்தின் தலைவர் மணியன் கலியமூர்த்தி கூறியதாவது: தர்மராஜா கோவிலில், 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த மூன்று பலகைக்கல் சிற்பங்களைக் கண்டறிந்தோம். அவற்றில் ஒன்று 2 அடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில், ஒரு ஆணும் பெண்ணும் கம்பீரமாக நிற்கின்றனர். இவர்களின் ஆடை, ஆபரணங்கள் செழுமையின் அடையாளமாக உள்ளன. இதன் மேல் பகுதியில், சூரியன், சந்திரன் மற்றும் ‘திரு காபாலி’ என எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து, ஒரு தம்பதி, கபாலீஸ்வரரின் பெயரால், ஏதோ ஒரு தியாகம் செய்துள்ளனர். அதனால், அவர்களின் புகழ் சூரியன், சந்திரன் உள்ளவரை நிலைத்திருக்கும் என்பதற்கு அடையாளமாக உள்ளது. இரண்டாவதாக, ஒரு பலகைக்கல்லில், கணவன் கைகூப்பி வணங்கிய நிலையிலும், மனைவி வலக்கரத்தில் பூச்செண்டு ஏந்தியவாறும் உள்ளனர். இது, கணவன் இறப்புக்குப்பின், உடன்கட்டை ஏறிய மனைவி அல்லது ஊருக்காக உயிர்த்தியாகம் செய்தவருடன் உடன்கட்டை ஏறிய மனைவியின் தியாகத்தைக் குறிக்கும் சிற்பமாக இருக்கலாம். இது, ‘மாசதிக்கல் , சதிக்கல் அல்லது தீப்பாய்ந்தாள் கல்’ என்ற வகையைச் சேர்ந்தது. அடுத்த சிற்பம், விரிசடை கோலத்தில் தன் வலது கையில் வெட்டப்பட்ட தலையை ஏந்திய வீரனின் உருவம் உள்ளது. அவன் இடையில் கூர்வாள் உள்ளது. இது, போரில் வெற்றி பெறவோ, வெற்றி பெற்றதற்காகவோ அல்லது தன் சவாலை நிறைவேற்றியதற்காகவோ, தலையை அரிந்து காணிக்கை செலுத்தும் வகையைச் சேர்ந்தது. இந்த சிற்பங்கள், நாயக்கர் காலத்தில், மயிலாப்பூர் பகுதியில் வாழ்ந்தோரின் வாழ்வியல் முறையை விளக்குபவையாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கார்த்திகை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில், ஆயில்யம் நட்சத்திர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, இன்று முதல் மண்டலாஷேகம் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உத்தர காமிக ஆகமம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar