Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
ராமேஸ்வரம் பரலோக மாதா ஆலய தேர்பவனி!
ஆகஸ்ட் 16,2012
அ-
+
Temple images

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பரலோகமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது. ராமேஸ்வரம் ஆத்திக்காடு பரலோகமாதா ஆலய திருவிழா கடந்த 6ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருப்பலி பூஜையை தொடர்ந்து 9வது நாளில் தேர்பவனி நடந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு கிராம கோயில் பிள்ளை சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பரலோகமாதா உருவச்சிலை வைக்கப்பட்டு தேர்பவனி நடந்தது. கிராமத்தலைவர்கள் பூபாலராயன்(ஓலைக்குடா), லூர்த்துசாமி(செம்மமடம்), ஜெபமாலை(தென்குடா), வின்சென்ட்(அரியாங்குண்டு), ஜான்பிரிட்டோ(தண்ணீர்ஊற்று), லூர்துசாமி(அக்காள் மடம்), சேசுராஜா(வேர்கொட்டு), ஜான்(காரங்காடு), சகாயராஜ்(தொண்டி), பட்டங்கட்டி கடையர் பேரவை தலைவர் அல்போன்ஸ், இளைஞர் பேரவை தலைவர் ஜோக்கஸ், ராமநாதபுரம் மறைமாவட்ட தலித் பணிக்குழு தலைவர் ஜோசப்ஜெரோமியஸ், கிறிஸ்தவ அரசுப்பணியாளர் சங்க தலைவர் பவுல்ராஜ், தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் ஜெரோன்குமார், ஆலய சொத்து பாதுகாப்பு குழுதலைவர் ஜூலியஸ் பங்கேற்றனர். நேற்று சிறப்பு திருப்பலி நடத்தி கொடியிறக்கப்பட்டது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.