Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
பெருமாள் திருக்கல்யாணத்திற்கு 32 சவரனில் திருமாங்கல்யம்!
ஆகஸ்ட் 25,2012
அ-
+
Temple images

புதுச்சேரி: திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவத்துக்காக, 32 சவரனில் திருமாங்கல்யம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் உற்சவம் லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்தில் நாளை மாலை 4.15 மணி முதல் இரவு 9.30 மணிவரை நடக்கிறது. திருக்கல்யாண உற்சவத்துக்கான தாலியை புதுச்சேரி லட்சுமி ஜூவல்லரி நிறுவனம் வடிவமைத்துள்ளது. 2 தாலிகளும் தலா 16 சவரன் எடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலை 3 லட்சத்து 75 ஆயிரமாகும்.ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணத்துக்கான தாலியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி வரதராஜப்பெருமாள் கோவிலில் நேற்று ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் தலைவர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. டிரஸ்ட் செயலாளர் பாபுஜி, துணை செய லாளர் நவீன் பாலாஜி, சப்தகிரி சிவக்கொழுந்து, விழாக்குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், முத்துகுமாரசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.திருக்கல்யாண உற்சவத்திற்காக, ஸ்ரீனிவாசப் பெருமாள் மற்றும் தாயார் உற்சவர் இன்று மாலை புதுச்சேரிக்கு எழுந்தருளுகின்றனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.