Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
திருச்செந்தூரில் ஆவணிதிருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
செப்டம்பர் 05,2012
அ-
+
Temple images

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.வரும் 14ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தமிழ்கடவுளாம் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் ஏராளமான விழாக்கள் நடைபெற்றுவருகிறது. இதில் ஆவணிதிருவிழாவும் ஒன்று. இந்தாண்டுக்கான ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிம்ம லக்னத்தில் காலை 5 மணிமுதல் 5.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை கொடிப்பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யானை மீது அமர்ந்து வீதி உலா நடந்தது. கொடிபட்டம் ஊர்வலம் உள்மாடவீதிகள் வழியாக சன்னதிதெரு வந்து கோயிலை வந்து அடைந்தது. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சன், அலுவலக கண்காணிப்பாளர் சாத்தையா, கண்காணிப்பா ளர் சுப்பையன், கோயில் த லைமை கணக்கர் பட்டுராஜ ன், செங்குந்தர் உறவின் மு றை தலைவர் சுப்பிரமணிய ன், செயலாளர் அய்யனார், இணைச்செயலாளர் பாலா று, தக்கார் உதவியாளர் நாகராஜன், கவுன்சிலர் பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.விழாவில் 1ம் திருநாளான இன்று மாலை 4.30 மணிக்கு அப்பர் சுவாமிகள் தங்கசப்பரத்தில் எழுந்தருளி திருவீதிகளில் உழவாரப்பணி செய்கிறார். 5ம் திருநாளான வரும் 7ம் தேதி இரவு.7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனையும், 7ம் திருநாளான வரும் 11ம் தேதி சுவாமி சிவப்புசாத்தி தங்கசப்பரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும், 8ம் திருநாளான வரும் 12ம் தேதி சுவாமி பச்சை சாத்திவீதி பச்சை மர கடைசல் சப்பரத்தி ல் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான 10ம் திருநாள் அன்று வரும் 14ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.