Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » மாத ராசி பலன்
மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) அப்பு... சூப்பர் அப்பு!
செப்டம்பர் 07,2012
அ-
+
Temple images

புரட்டாசி: காலத்தின் அருமை அறிந்து வெற்றிபெறும் மகரராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சனிபகவான் பத்தாம் இடமான துலாம் வீட்டில் உள்ளார். இதனால் செயல் ஒவ்வொன்றிலும் நீதி, நேர்மை, நியாயத்தின் தன்மை அதிகரிக்கும். நற்பலன் தரும் கிரகங்களாக செவ்வாய், ராகு, புதன், சுக்கிரன், குரு செயல்படுகின்றன. மனதில் புத்துணர்ச்சியும் செயலில் வெற்றியும் அதிகரிக்கும். வீடு, வாகனத்தில் திருப்திகரமான நிலை உண்டு.  புத்திரர்களின் நற்செயல் மனதை மகிழ்விக்கும். குடும்பத்தின் தேவை பெருமளவில் பூர்த்தியாகும். மங்கல நிகழ்வும் உண்டு.  உடல்நலம் சிறந்து உற்சாகமுடன் பணிபுரிவீர்கள். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறையும் அன்பும் கொள்வர். தொழிலதிபர்களுக்கு சிரமம் குறைந்து உற்பத்தியில் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைத்து தாராள பணவரவு, மனமகிழ்ச்சி ஏற்படும். வியாபாரிகள் சந்தையில் கூடுதல் வரவேற்பு பெறுவர். விற்பனையும் லாபவிகிதமும் அதிகரிக்கும். பணியாளர்கள் சுறுசுறுப்பாகசெயல் புரிந்து பணி இலக்கு எளிதில் நிறைவேற்றுவர். சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் சந்தோஷ சூழ்நிலை அமைந்து இனிய வாழ்வு பெறுவர். குடும்பத்தில் மங்கல நிகழ்வு, பொன், பொருள் சேர்க்கை உண்டு. பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணி நிறைவேற்றி நற்பெயர் பெறுவர். பதவி உயர்வு, பிற சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராளமான லாபம் காண்பர். நவீன கருவி வாங்க அனுகூலம் உண்டு. அரசியல்வாதிகள் எதிரிகளின் தொல்லை இல்லாத நிலை பெறுவர். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் அபிவிருத்தி உண்டு. மாணவர்கள் படிப்பில் சாதனை நிகழ்த்துவர்.

பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு கூடும்.
உஷார் நாள்: 11.10.12 பகல் 11.52- 13.10.12 மாலை 5.42.
வெற்றி நாள்: செப்டம்பர் 20, 21, 22
நிறம்: மஞ்சள், சிமென்ட்     எண்: 3, 4

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.