Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : பங்குனி ராசி பலன் ரிஷபம் : சித்திரை ராசி பலன் ரிஷபம் : சித்திரை ராசி பலன்
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மேஷம்: சித்திரை ராசி பலன்
எழுத்தின் அளவு:
மேஷம்: சித்திரை ராசி பலன்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2024
04:04

அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் அருளும், எதையும் சாதித்திடும் சக்தியும் கொண்ட உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சனி, செவ்வாயுடன் பிறக்கும் இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்களில் இருந்து விடுதலை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். உடலில் ஏற்பட்ட நலிவுகள் உங்களை விட்டு விடைபெறும். இதுவரையில் ஏதோ ஒரு சங்கடத்துடன் இருந்த நிலை மாறி ஆரோக்கியமாக செயல்பட ஆரம்பிப்பீர்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். பூர்வ புண்ணியாதிபதி உங்கள் ராசியில் உச்சம் பெறுவதால் செல்வாக்கு உயரும். இதுவரையில் தொழில், வியாபாரம், வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் விலகும். அரசுவழி முயற்சிகள் ஆதாயம் தரும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். வேலைவாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஏப்.27
அதிர்ஷ்ட நாள்: ஏப்.16,18, 25. மே 7, 9
பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை வழிபட வாழ்வு வளமாகும்.

பரணி: சகோதர தைரிய வீரிய காரகனான செவ்வாய், அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு உங்கள் முன்னேற்றத்தின் மீது எப்போதும் அக்கறை இருக்கும். மற்றவர்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வதில் முதன்மையானவராக  இருப்பீர்கள். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை வழங்கும் மாதமாக இருக்கப் போகிறது. உங்கள் நட்சத்திரநாதன் மாதம் முழுவதும் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார். வருமானத்தை அதிகரிப்பார். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் குருபகவான் தனஸ்தானத்திற்கு செல்வதால் இதுவரையில் இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். வெளிநாட்டிற்கு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் லாபம் தரும். வம்பு, வழக்குகள் உங்களை விட்டு விலக ஆரம்பிக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் உடல்நிலையில் இருந்த அச்சம் விலகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வந்து சேரும். விவசாயிகளின் விருப்பம் பூர்த்தியாகும். ஆதாயம் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவர். பெண்கள் நிலையில் இருந்த சங்கடம் விலகி முன்னேற்றம் ஏற்படும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியில் இருந்த நெருக்கடி விலகி எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஏப்.28.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.15,18,24,27, மே 6,9
பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு முல்லைப்பூ சார்த்தி வழிபட விருப்பம் நிறைவேறும்.

கார்த்திகை 1 ம் பாதம்: ஆன்ம காரகன், ஆற்றல் காரகனான சூரியன், தைரிய பராக்கிரமக் காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு செல்வாக்கு எப்போதும் நிலைத்திருக்கும். மற்றவருக்கு தலைமை தாங்கிடக் கூடியவர்களாக இருப்பீர்கள். பிறக்கப்போகும் சித்திரை மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் ராசிக்குள் உச்சம் பெறுவதால் இதுவரையில் இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். பணியில் சந்தித்து வந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் வந்து சேரும். ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் எதிர்ப்பு விலகி செல்வாக்கு மேம்படும். வழக்குகள் விவகாரத்தில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகி லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் முன்னேற்றம் அடையும். அரசாங்கத்தில் இருந்து எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இதுவரை இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். லாபச் சனியின் பார்வை ராசிக்கு உண்டாவதால் உடல்நலனில் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மதிப்பு உயரும். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் எதிர்பார்ப்பு நிறைவேறும். சிலருக்கு எதிர்பார்த்த வேலை அமையும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஏப்.29.
அதிர்ஷ்ட நாள்: ஏப்.18, 19, 27, 28, மே 1, 9, 10

பரிகாரம் சூரிய பகவானை வணங்கி வழிபட வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2,3,4 ம் பாதம்: ஆற்றலுக்கும் வெற்றிக்கும் காரகனான சூரியன், வித்தைகளுக்கு காரகனான புதனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar