Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
சபரிமலை மேல்சாந்தி தேர்வு!
அக்டோபர் 17,2012
அ-
+
Temple images

சமபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக, வைக்கம் என்.தாமோதரன் போத்தி் தேர்வு செய்யப்பட்டார். மாளிகைபுரம் மேல்சாந்தியாக, திருச்சூர், கூடாத்துகுளம் உன்னிகருஷ்ணன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் வரும் கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் ஓராண்டுக்கு இந்த பொறுப்பில் இருப்பர். கேரள தலைமைச் செயலர் முன்னிலையில் இந்த தேர்வு நடைபெற்றது.

தேர்வு செய்யப்படும் முறை: ஆண்டுதோறும் ஐப்பசி முதல் தேதியன்று இந்த தேர்வு நடைபெறும். தேவசம் போர்டு பரிந்துரைக்கும் 7 பேரின் பெயர்களைக் கொண்டு 7 சீட்டுகள் ஒரு பாத்திரத்திலும் மேல்சாந்தி என்ற எழுதப்பட்ட 6 சீட்டுகள் மற்றும் ஒன்றும் எழுதப்படாத ஒரு சீட்டு, மற்றொரு பாத்திரத்திலும் போடப்பட்டு, அவை ஐயப்பன் முன் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும். பின்னர் முதல் பாத்திரத்தில் உள்ள ஒரு சீட்டும் இரண்டாவது பாத்திரத்தில் உள்ள ஒரு சீட்டும் எடுக்கப்படும். இரண்டாவது பாத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சீ்ட்டில் மேல்சாந்தி என்று எழுதப்பட்ட சீட்டு வந்தால், முதல் பாத்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட சீட்டில் உள்ள பெயரைக் கொண்டவர் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்படுவார். இரண்டாவ்து பாத்திரத்தில் இருந்து எடுக்கப்படும் சீட்டில் ஒன்றும் எழுத்ப்படாமல் இருந்தால், அதே நேரத்தில் முதல் பாத்திரத்தில் இருந்து எடுக்கப்படும் சீ்டடில் உள்ள பெயரைக் கொண்டவர் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.