Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
மருதமலையில் உண்டியல் வசூல் ரூ.22 லட்சம்!
டிசம்பர் 04,2012
அ-
+
Temple images

பேரூர்: மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணியதில், 22.28 லட்சம் ரூபாய் வசூலாகியிருந்தது,மருதமலை சுப்ரமணியசாமி திருக்கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை உதவிகமிஷனர் வீரராஜன், ஆய்வர் ராதா முன்னிலையில், கோவில் மண்டப வளாகத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில், பொது உண்டியலில், 18 லட்சத்து 96 ஆயிரத்து 398 ரூபாய் வசூலாகியிருந்தது. கோசாலை உண்டியலில் 1 லட்சத்து 13 ஆயிரத்து 838 ரூபாய், அன்னதான உண்டியலில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 287 ரூபாய், திருப்பணி உண்டியலில் 35 ஆயிரத்து 182 ரூபாய் உள்பட மொத்தம் 22 லட்சத்து 28 ஆயிரத்து 705 ரூபாய் வசூலாகியிருந்தது. மேலும், 49 கிராம் தங்கமும், 227 கிராம் வெள்ளியும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில், மருதமலை தேவஸ்தான பள்ளி மாணவர்கள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.மருதமலை கோவில் துணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் திருப்பணி ஊழியர்கள் உடனிருந்தனர்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.