Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

தகவல்கள் :
முதல் பக்கம் » தகவல்கள்
திருஇந்தளூர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் வழிபாடு!
டிசம்பர் 24,2012
அ-
+
Temple images

மயிலாடுதுறை: மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில் காலை நட ந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது பெருமாள் தங்க, ரெத்தின அ ங்கியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை, திருஇந்தளூரில் அமைந்துள்ளது பரமள ரெங்கநாதர் கோவில், பெருமாள் பள்ளி கொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க கோவில்களில் 5வது ஆலயமாகும். சந்திரன் சாபம் தீர்த்ததும், 108 திவ்ய தேசங்களில் 26வது கோவிலுமான இந் த கோவிலில் ஏகாதேசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் தி றப்பு நிகழ்ச்சி நடைபெற்றறது. இதில் பெருமாள் தங்க, ரெத்தின அங்கியில் எழுந்தருளினார். அதைதொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்கு பின்பு பரமபத வாச ல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் வசந்த மண்டபத்தி ற்கு எழுந்தருளினார். அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். இதுபோல சீர்காழியில் உள்ள 108 திவ்ய தேசங்கலில் ஒன்றான தாடாளன் ö பருமாள் கோவில் மற்றும் நாங்கூரில் உள்ள திவ்யதேச கோவில்களிலும் செ õர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.