Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு!
டிசம்பர் 25,2012
அ-
+
Temple images

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயிலில், ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காலை 7.05 மணிக்கு, பரம பத வாசல் திறக்கப்பட்டது. இதற்காக, ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார், பெரிய பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து, பல்லக்கில் புறப்பட்டனர். பரம பத வாசலில் ஆழ்வார்கள் காத்து இருக்க , வாசல் திறக்கப்பட்டு, பெரிய பெருமாளுடன் அம்பாள் மற்றும் சுவாமி எழுந்தருளினர். பக்தர்கள் கோவிந்தா, நாராயணா கோஷத்துடன் தரிசித்தனர். மாடவீதி, கந்தாடை தெரு வழியாக வந்து, ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். மாவட்ட நீதிபதி கிருஷ்ணமூர்த்தி, கோயில் தக்கார் ரவிசந்திரன், நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம், மகேஸ்வரன் எஸ்.பி., நகராட்சி தலைவர் செந்தில் குமாரி உட்பட பலர் கலந்துகொண்டனர். சக்திவேல் டி.எஸ்.பி., தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவின் 10ம் நாள் வரை,மாலை 5 மணிக்கு, பரம பத வாசல் திறப்பு நடைபெறுகிறது.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.