Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

அம்மனின் உத்தரவு ஈரோடு பெரியாயி!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
முழுமுதற் கடவுளின் வழியிலே...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
15:59

கோயில்களில் வலம் வரும் முறையை பெற்றோரை பிரதட்சணம் செய்து முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் விநாயகரே. கோயில்களில் வலம் வரும் பக்தர்களைக் கண்ட ஒருவர் அதன்கான விளக்கத்தை சுவாமிஜி ஒருவரிடம் கேட்டார். மனிதர்களின் மனம் இயந்திரத்தனமானது. அதனை அடக்குவது சுலபம் அல்ல. இயந்திரத்தை இயந்திரத்தனமாக இயக்குவதுதான் முறை. அப்படி மனதை இயந்திரத்தனமாக இயக்கும் வழிதான் வலம் வருவது. அதாவது, ஓர் இயந்திரம் எப்படி எதைப்பற்றியும் சிந்திக்காமல், செயல்படுவதை மட்டுமே செய்கிறதோ, அப்படி இறைவனை வலம் வரும்போது வேறு எந்த சிந்தனையும் எழாது. அதனால் மனம் ஒருமைப்படும். அதுவே ஆரோக்கியத்திற்கும் ஆனந்தத்திற்கும் வழியாக அமையும் என்றார் சுவாமிஜி.

நம் மனதில் எத்தனையோ தடைகள் இருக்கின்றன. அவையே நம் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன. கோயிலை வலம் வரும்போது அந்தத் தடைகள் தகர்ந்து அவையே படிக்கற்களாகும் என்கின்றன பக்தி நூல்கள். ஆலய வலம் வருவதில் பல வகைகள் உண்டு. அங்கப் பிரதட்சணமும், அடிப் பிரதட்சணமும் முக்கியமானவை. சோம சூக்தப் பிரதட்சணம் பிரதோஷ காலத்தில் வருவது. எந்தவகையான பிரதட்சணமாக இருந்தாலும் அவசர அவசரமாக ஓடுவதுபோல் இல்லாமல், மெதுவாகவே வலம் வரவேண்டும். தண்ணீர்க் குடத்தினை தலையில் சுமந்து நடப்பதுபோலவும், நிறைமாத கர்ப்பிணி போன்றும் மெதுவாக நடப்பதே சிறப்பானது. வலம் வரும்போது இறைநாமம் சொல்வதும், இறை துதிகளைப் பாடுவதும் நல்லது. மவுனமாக வலம் வருவதும் சிறப்பானதே. பிறருடன் பேசியபடியே வருவதோ, கண்களை அலைபாய விட்டவாறே நடப்பதோ கூடாது. ஒருமைப்பட்ட மனதுடன் கோயிலை வலம் வருவதால் கோடானகோடி ஆண்டுகள் தவம்புரிந்த பலன் கிடைக்கும். கோயிலை வலம் வர எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பலஜன்ம பாவங்களைப் போக்குவதாக பூஜா விதிகள் கூறுகின்றன. முதற்கடவுள் உணர்த்திய பாடத்தைக் கடைப்பிடித்து அதன் முழுப்பலனையும் பெறுவோம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பூமத்திய ரேகையில் சூரியனுடைய கதிர்வீச்சு எப்படி அதிகமாகவும், அருகிலும் இருக்கிறதோ, அதேபோல் சனி ... மேலும்
 
‘‘பிரார்த்தனையைத் தவிர வேறு எந்தச் செயலாலும் விதியை மாற்றிக் கொள்ள முடியாது. நற்செயல்களைத் தவிர ... மேலும்
 
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் ... மேலும்
 
அமாவாசை, சிராத்தம் போன்ற நாட்கள் “பிதுர் தினம்” என்றழைக்கப்படுகின்றன. அன்று பிதுர் காரியத்தை முடித்து ... மேலும்
 
ஒரு வயது முடிந்த பிறகு கணிக்க வேண்டும். 12 வயது வரை பலன் கணிக்கக் கூடாது. பலரும் பலவிதமாகப் பலன் கூறுகிற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2018 www.dinamalar.com. All rights reserved.