பதிவு செய்த நாள்
12
செப்
2014
03:09
சுறுசுறுப்புடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே!
சூரியன், புதன்,ராகு மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கின்றனர். தற்போது நன்மையளிக்கும் சுக்கிரன் செப். 26ல் போகும் 6ம் இடம் சிறப்பானதல்ல. சூரியன், புதன் பலத்தால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து கூடும். குடும்பத்தில் சுபம் குறித்த பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்திற்குத் தேவையான வசதி கிடைக்கும். மகிழ்ச்சி நிலைக்கும். குடும்ப பெரியோர்கள் ஆலோசனையால் நன்மை உண்டாகும். நண்பர்களும் உதவிகரமாக இருப்பர்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். விரிவாக்கப்பணி வெற்றி பெறும். எதிரிகளின் இடை யூறு மறைந்து போகும். புதனின் பலத்தால் சிலருக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் சக ஊழியர் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.
கலைஞர்கள் சிறப்பான நிலையில் காணப்படுவீர்கள். புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கும்.செப். 26-ந் தேதிக்கு பிறகு புகழ் பாராட்டு எதிர்பார்த்த படி இருக்காது என்றாலும் பணத்திற்கு குறை இருக்காது. மனதில் அவ்வப்போது சோர்வு ஏற்படலாம்.
மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடுவர்.
விவசாயிகளுக்கு புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். பசு வளர்ப்பில் போதுமான வருவாயை பெறலாம். நீதிமன்ற விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்களால் குடும்பம் தழைத்து ஓங்கும். உங்களது உழைப்பும் அனுசரிப்பும் அதிகமாக தேவைப்படும். சுபவிஷயங்களில்பங்கேற்று மகிழ்வீர்கள்.
நல்ல நாள்: செப்.17, 18, 24, 25, 26, 27, 28, அக். 3, 4, 5, 6, 9, 10, 11, 14, 15
கவன நாள்: செப். 29, 30 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,7 நிறம்: பச்சை, செந்துõரம்
வழிபாடு: தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாயன்று முருகன் கோயிலுக்கு சென்று வாருங்கள்.