உடுமலை : உடுமலை, சத்யசாய் சேவா நிறுவனத்தின் சார்பில், சத்யசாயிபாபா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. உடுமலை, சத்யசாய் சேவா சமிதிகள் சார்பில், சத்யசாயிபாபாவின் 89 வது பிறந்தநாள் விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், இலவச சிறப்பு கண் மருத்துவ முகாம், பல் மற்றும் சித்த மருத்துவ, மகளிக்கான நிகழ்ச்சி, குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, சிறப்பு வழிபாட்டு பூஜைகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.