Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்யசாயிபாபா பிறந்த நாள் விழா! அமலோற்பவ அன்னை ஆலய 113ம் ஆண்டு விழா 28ல்  துவக்கம்! அமலோற்பவ அன்னை ஆலய 113ம் ஆண்டு விழா 28ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விக்ரகங்களுக்கு புஷ்பாதி வாசம்; திருமண் சமர்ப்பிக்கும் விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 நவ
2014
11:11

திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதிய விக்ரகங்களுக்கு புஷ்பாதி வாசம் மற்றும் 106 திவ்யதேச திருமண் சமர்ப்பிக்கும் விழா, நேற்று நடந்தது.திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் 1ம் தேதி நடக்கிறது; யாக சாலை பூஜை, வரும் 28ல் துவங்குகிறது. கோவில் வளாகத்தில் புதிதாக சக்கரத்தாழ்வார், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஹயக்கிரீவர், ஸ்ரீதன்வந்திரி பெருமாள் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு பிரதிஷ்டை செய்வதற்காக, சுவாமி விக்ரகங்கள் மற்றும் ஆழ்வார்களின் சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஆகம விதிப்படி ஜலாதி வாசம், தான்ய வாசம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை 10.00 மணிக்கு, புஷ்பாதி வாசம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்வேறு வகையான மலர்களை, பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, தொட்டிகளுக்குள் இருந்த விக்ரகங்கள் மீது தூவினர்.திருமண் சமர்ப்பிப்பு: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 108 திவ்ய தேசங்களில், நில உலகில் காண முடியாத திருப்பரமபதம், திருப்பாற்கடல் தவிர, 106 திவ்ய தேசங்களில் இருந்து திருமண், தீர்த்தம் மற்றும் திருதுளா ஆகியவை பக்தர்களால் எடுத்து வரப்பட்டு, கோவில் வளாகத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. அவை, கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொடிமரம் முன் அமைக்கப்பட்டிருந்த தொட்டியில், திருமண்ணை பக்தர்கள் இட்டு வழிபட்டனர்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar