மூங்கிலணை காமாட்சி கோயில்: ரூ.32 லட்சம் செலவில் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜூலை 2011 12:07
தேவதானப்பட்டி : மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயிலில் 32 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் தரைத்தளம் அமைக்கும் பணி நடக்கிறது. தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் ஒன்றாகும். அம்மன் சன்னதிக்கு தெற்கு, மேற்கு, வடக்கு பக்கங்களில் மண் தரை இருந்தது. இத்தரைப் பகுதியை சிமென்ட் தளம் அமைப்பதற்கு கோயில் நிதி 25 லட்சம் ரூபாய், ஆணையாளர் பொது நலநிதி 7 லட்சம் ரூபாய் மொத்தம் 32 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி துவங்கியுள்ளதாக நிர்வாக அதிகாரி முருகன் தெரிவித்தார்.