Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகத்தீஸ்வரர் கோவிலில் அகத்திய ... காளஹஸ்தியில் ஏழு கங்கை அம்மன் திருவிழா கோலாகலம் காளஹஸ்தியில் ஏழு கங்கை அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதனூர் நந்தனார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; காஞ்சி பீடாதிபதி நடத்தி வைத்தார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதனூர் நந்தனார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; காஞ்சி பீடாதிபதி நடத்தி வைத்தார்

பதிவு செய்த நாள்

10 டிச
2025
05:12

சென்னை: கடலுார் மாவட்டம், ம.ஆதனுார் கிராமத்தில் உள்ள, நந்தனார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.


கடலுார் மாவட்டம், காட்டு மன்னார்கோயில் அருகில் உள்ள, ம.ஆதனுார் கிராமத்தில், நாயன்மார்களுள் ஒருவரான நந்நதனாருக்கு, தனி சன்னதியுடன் கூடிய, சவுந்தரநாயகி அம்பிகா சமேத ஸ்ரீசிவலோக நாதர் கோவில் அமைந்துள்ளது. ஊர் பொது மக்கள், சோகோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு ஒத்துழைப்புடன், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி, சங்கராச்சார்ய ஸ்வாமிகள் முன்னெடுப்பில், கோவில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம்,  காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னிலையில், கடந்த 10ம் தேதி வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தில், நந்தனார் ஆன்மிக மகளிர் மன்றம் மற்றும் பண்பாட்டு மையம், காஞ்சி காமகோடி பீடத்தின் சமய சமுதாய கலாசார சேவை அமைப்பான இந்து சமய மன்றம் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு, காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆசி வழங்கினார். பக்தர்களுக்கு நாள் முழுதும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar