ராஜபாளையம் : ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில் ஆனிவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ராஜபாளையம் மதுரை ரோட்டில் உள்ள இந்த கோயிலில் நேற்று காலை 10.25 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. மாயூரநாதர் சுவாமி, அஞ்சல்நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், நந்திக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் அடுக்கு தீபாராதனைகள் நடந்தன. பத்து நாள்கள் நடக்கும் விழாவில் தினமும் சப்பரம் மற்றும் வாகனத்தில் சுவாமி, அம்பாள் உலா நடக்கும். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 12ல்நடைபெற உள்ளது. அடுத்தநாள் திருவாசகம் முற்றோதல், தீர்த்தவாரி மற்றும் சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளுடன் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி வேல்முருகன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.