விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் உண்டியல்களில், 7 லட்சத்து 1,598 ரூபாய் பக்தர்கள் காணிக்கை இருந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி, உதவி ஆணையர் ஜோதி தலைமையில் நடந்தது. ஆய்வாளர் சுபத்ரா, செயல் அலுவலர் கொளஞ்சி மற்றும் கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர். அதில் 7 லட்சத்து 1,598 ரூபாய் மற்றும் தங்கம் 3.200 கிராம், வெள்ளிப் பொருட்கள் 82 கிராம் இருந்தன. இதேபோல், கடந்த செப்டம்பர் 16ம் தேதி உண்டியல்கள் திறப்பின் போது, 9 லட்சத்து 61 ஆயிரத்து 779 ரூபாய், 15 கிராம் தங்கம், 138 கிராம் வெள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.