Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ... கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) தடைகள் தகரும் கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சுபநிகழ்ச்சி நடக்கும்
எழுத்தின் அளவு:
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) சுபநிகழ்ச்சி நடக்கும்

பதிவு செய்த நாள்

10 பிப்
2016
03:02

துணிச்சல் மிக்க சிம்ம ராசி அன்பர்களே!

கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். மாத முற்பகுதியில் செவ்வாய், புதனால் பொருளாதார வளம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். வீடு, வாகனம் வாங்கலாம். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். இந்த நிலை பிப். 25 வரை தான். அதன்பின் கடும் முயற்சியின் பேரில்தான் எதையும் செய்து முடிக்க முடியும். சிக்கனம் தேவை. பிப். 25க்கு பிறகு கணவன் மனைவி இடையே பிணக்குகள் வரலாம். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.

தொழில், வியாபாரத்தில் லாபம் ஓரளவு அதிகரிக்கும். அபார ஆற்றல் பிறக்கும். புதிய தொழிலில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். போட்டியாளர்களின் தொல்லை அவ்வப்போது வரலாம். மார்ச் 5,6,7ல் எதிர்பாராத பணவரவு இருக்கும்.

பணியாளர்கள் பதவி உயர்வு காண்பர். செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். வேலைப்பளுவும், அலைச்சலும் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்கேற்ற பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு இருக்கும். சிரத்தை எடுத்தால்தான் கோரிக்கைகள் நிறைவேறும்.

கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் மாதக் கடைசியில் மறையும். புகழ், பாராட்டு கிடைப்பது அரிது.

அரசியல்வாதிகள் வெற்றிக்கு வழி காணலாம். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்.

மாணவர்கள் படிப்பில் முன்னேற அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களுடன் சுமூகமாக இருக்கவும், பெற்றோர் சொல் கேட்கவும்.

விவசாயிகளுக்கு உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். பசு மற்றும் கால்நடைகள் வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சுமாராகவே இருக்கும்.

பெண்கள் மகிழ்ச்சியுன் காணப்படுவர். பிப். 27,28,29ல் புத்தாடை, நகை வாங்கலாம். சகோதரிகளால் உதவி உண்டு. பக்கத்து வீட்டாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.

நல்ல நாள்: பிப். 16,17,18,19,22,23,24,27,28,29 மார்ச் 5,6,7,8,9.
கவன நாள்: பிப்ரவரி 13 மார்ச் 10,11 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 2,4 நிறம்: சிவப்பு, பச்சை

பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்துங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar