பதிவு செய்த நாள்
11
ஜூன்
2016
02:06
பெற்றோரை நேசிக்கும் சிம்மராசி அன்பர்களே! (சிறப்பான மாதம்)
11-ல் உள்ள சூரியன் நன்மை தர காத்திருக்கிறார். புதன் ஜூலை 6 வரை நற்பலன் கொடுப்பார். சுக்கிரனால் ஜூலை 8 வரை நன்மை உண்டாகும். விருச்சிகத்தில் செவ்வாய் ஜூன் 19ல் வக்கிரம் அடையும் காலத்திலும், அதன் பிறகு ஜூலை1ல் வக்கிர நிவர்த்தி அடைந்த பின்னும் வாழ்வில் நன்மை அதிகரிக்கும். இதனால் இந்த மாதம் சிறப்பானதாக அமையும். சூரியனால் பொருளாதார வளம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசு வகையில் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். கணவன், மனைவி இடையே அன்பு மேலோங்கும். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.
தொழில், வியாபாரத்தில் அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். புதிய தொழிலில் ஓரளவு அனுகூலம் உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும்.
பணியாளர்களுக்கு கோரிக்கை நிறைவேறும். சக ஊழியர்கள் தகுந்த நேரத்தில் உதவுவர். ஜூலை 1,2 சிறப்பான நாட்களாக இருக்கும்.
கலைஞர்கள் பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சிறப்பான நிலை காண்பர். மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் போட்டியில் வெற்றி காணலாம்.
பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். ஜூன் 19 க்கு பிறகு தல யாத்திரை செல்லும் வாய்ப்பு உண்டாகும். சுய தொழில் புரியும் பெண்கள் வங்கி கடன் மூலம் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவர்.
விவசாயிகள் அதிக மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம்
எதிர்பார்த்த லாபம் கிடைகும்.
நல்ல நாள்: ஜூன் 15,16,17,23,24,25,26, ஜூலை 1,2,3,4,5,8,9,13,14
கவன நாள்: ஜூன் 27,28 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 1,9
நிறம்: பச்சை,செந்துõரம்
பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவது நிம்மதியளிக்கும். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். ராகுவுக்கும், கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள்.